நாட்டில் வாழும் சகல இனத்தவர்களிடமும் சாந்தி, சமாதானம் இன நல்லுறவு, பாதுகாப்பு போன்ற அனைத்து விடயங்களிலும் எமது மக்கள் இன ,மத ,மொழி வேறுபாடுகளைக் களைந்து தேசிய நல்லோருமைப்பாட்டினை வளர்த்தெடுக்கும் புதியதொரு உத்வேகம் கொண்ட புதுவருடப்பிறப்பாக தமிழ், சிங்கள சித்திரைப் புத்தாண்டு மலரவேண்டுமென மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தமது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் .
மட்டக்களப்பு மாநகர முதல்வராக பதவியேற்று முதலாவதாக வரேவேற்கும் தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டினையொட்டி அவர் விடுத்த வாழ்த்துச் செய்தியிலேயே இதனை அவர் குறிப்பிட்டுள்ளார் .
மட்டக்களப்பு மாவட்டம் என்பது சகல வளங்களும் நிறைந்த ஒரு புண்ணிய பூமியாகும். மக்கள் இப்புனித பூமியின் இயற்கையின் எழில் மிகுந்த சுத்தமான சுவாசக்காற்றினை சுவாசிப்பதற்கு சூழல் பாதுகாப்பில் முறையான திட்டங்களை எமது சபை முன்னேடுக்கின்றபோது அனைவரும் அதற்கு ஒத்துழைப்பு நல்குவதுடன். ஒருவரை ஒருவர் நிந்திக்காமல் ஒருமதத்தவர் மற்றுமோர் மதத்தவர்களை இம்சைப்படுத்தாமல் சகோதரத்துவத்துடன் பிரிவினையற்ற ஓர் நல்லிணக்கப் பாதையில் பயணிப்பதற்காக நாம் அனைவரும் இத்தருணத்தில் திடசங்கற்பம் பூணவேண்டுமேனவும்.அவரது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.