பொலனறுவை மாநகர முதல்வர் மட்டக்களப்பு மாநரக சபைக்கு விஜயம்

2019-01-25

பொலனறுவை மாநகர முதல்வர் மட்டக்களப்பு மாநரக சபைக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டார்.

பொலன்னறுவை உள்ளுராட்சி சபையானது பிரதேச சபையாக இருந்து ஜனாதிபதியினால் மாநகர சபையாக தரமுயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து அம் மாநரக சபையின் முதலாவது மாநரக முதல்வாராக தெரிவு செய்யப்பட்ட சானக ரணசிங்க அவர்கள் இன்று மட்டக்களப்பு மாநகர சபைக்கு தனது உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டார்.

இவரை மாநகர பிரதி முதல்வர் மற்றும் ஆணையாளர் உள்ளிட்ட குழுவினர் வரவேற்றனர்.

மட்டக்களப்பு மாநரக சபையின் சிறப்பான செயற்பாடுகள் தொடர்பாக பாராட்டியதோடு, புதிதாக பயணத்தை ஆரம்பித்துள்ள தமது மாநரக சபையையும் மட்டக்களப்பு மாநரக சபையின் நிர்வாகக் கட்டமைப்புகளையும் நல்ல பல திட்டங்களையும் நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதன்போது மாநரக பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினரும், வேலைகள் குழுவின் தலைவருமான த.இராஜேந்திரம் உட்பட மாநகர ஆணையாளர், பிரதி ஆணையாளர், பொறியியலாளர், கணக்காளர் ஆகியோரும் இணைந்து கொண்டனர்.

Terms & Conditions
Batticaloa Municipal Council © All rights reserved
Developed by NSystemNetworks