வெபர் அரங்கின் ஓடு பாதைக்கான மின் ஒளியூட்டல்

2019-06-22

விளையாட்டு வீரர்களின் நலன் கருதி வெபர் மைதானத்திற்கு மின் ஒளி வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன் முதற்கட்டமாக பிறண்டிக்ஸ் நிறுவனத்தின் பங்களிப்புடன் வெபர் அரங்கின் ஓடு பாதைக்கான மின் ஒளியூட்டல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மாநகரிற்குள் வதியும் பொது மக்களும், விளையாட்டு வீரரர்களும் இரவு நேர பயிற்சிகளை மேற்கொள்ளும் வகையில் இப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ் ஆரம்ப நிகழ்வில் மாநகர முதல்வர் தி.சரவணபவன், மாநகர சபை உறுப்பினர்களான த.இராஜேந்திரன், கிளனி வசந்தகுமார் மற்றும் பிறண்டிக்ஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Terms & Conditions
Batticaloa Municipal Council © All rights reserved
Developed by NSystemNetworks