சிறுவர்நேய மாநகரக் கட்டமைப்பு தொடர்பான கலந்துரையாடல்

2019-09-30

சிறுவர்நேய மாநகரக் கட்டமைப்பு வேலைகளின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடலானது மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் மாநகர சபையின் குழு மண்டபத்தில் இடம்பெற்றது.

சிறுவர்களின் பாதுகாப்பு அவர்களின் சுதந்திரமான வாழ்வியல் முறைகள் என்பவற்றினைக் கருத்தில் கொண்டு மட்டக்களப்பு மாநகரமானது சிறுவர்நேய மாநகரமாக மாற்றியமைக்கப்படவுள்ளது. இதற்காக சிறுவர்களின் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு செயற்றிட்டங்கள், சிறுவர் மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து ஒழுங்குகள் போன்றவை மாற்றியமைக்கப்பட வேண்டும் எனும் ஆலோசனைகள் இங்கே முன்வைக்கப்பட்டன.

பல வளர்முக நாடுகளில் மேற்படி சிறுவர்நேய மாநகரங்கள் அமையப்பெற்றிருந்தாலும், இலங்கையில் முதல்முறையாகவும் ஏனைய மாநகர சபைகளுக்கு எடுத்துக்காட்டாக மேற்படி திட்டம் அமையப்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேற்படிக் கலந்துரையாடலில் மாநகர ஆணையாளர் கா.சித்திரவேல், மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் எல்.பிரசாந்தன், சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி கெணடி, யுனிசெப் நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் அரச, தனியார் துறைகளின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Terms & Conditions
Batticaloa Municipal Council © All rights reserved
Developed by NSystemNetworks