பெண்களுக்காக கைத்தறி தொழிற்பயிற்சி நிலையம்

2019-10-18

பெண்களுக்கான சுயதொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கோடு மட்டக்களப்பில் கைத்தறி தொழிற்பயிற்சி நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாநகரசபையும் கைத்தொழில் திணைக்களமும், நியு ஏரோ தொண்டு நிறுவனமும் இணைந்து தொழில் வாய்ப்புகளற்றிருக்கும் பெண்களுக்கு சுயதொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கோடு மட்டக்களப்பு மாநகர பொதுச் சந்தைக் கட்டிடத் தொகுதியில் கைத்தறி தொழிற்பயிற்சி நிலையமானது மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தியாகராஜா சரவணபவனால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பெண்பிள்ளைகள் மற்றும் பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் தமது குடும்ப வறுமை நிலையினைக் கருத்தில் கொண்டு தமக்கென ஓர் தொழிலைனைப் பெற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்படுகின்றார்கள். இத்தகையவர்கள் அச்சமற்று தொழில் புரியக் கூடிய அவர்கள் எதிர்காலத்தில் நிலையான ஓர் வருமானத்தினைப் பெற்றுக்கொள்ளக் கூடிய ஓர் சுய தொழிலினை அவர்களுக்கு வழங்க வேண்டியது சமுகப் பொறுப்புமிக்கவர்களின் பிரதான கடமையாகும். இதன் காரணமாகவே கைத்தொழில் திணைக்களத்தோடும், நியு ஏரோ பெண்கள் அபிவிருத்தி நிறுவனத்தோடும், ஆதித்தியா கைத்தறி நிறுவனத்தினரோடும் இணைந்து மேற்படி கைத்தறி பயிற்சி மையத்தினையும் அத்தோடு இணைந்த தொழில் வாய்ப்பு நிறுவனத்தினையும் ஆரம்பித்துள்ளதாக மாநகர முதல்வர் தெரிவித்தார்.

மேலும் இத்தகைய கைத்தறி பயிற்சி நிலையத்தின் ஊடாக எமது சமுகத்தினை பொருளாதார ரீதியாக மேம்பாட்டுத்தி, தமிழர்களுக்கு என தனித்துவமான வியாபார நாமங்களையும் உற்பத்திகளையும் இவ் வர்த்தக உலகில் முதன்மைப்படுத்த முடியும். அத்தோடு தொழில்களற்று இருக்கின்ற எமது சமுதாயத்தினரை சிறந்த ஒரு தொழில் முன்னேற்ற நகர்விற்கு கொண்டு செல்லும். இங்கு போதியளவான பாதுகாப்பும் உரிய கண்காணிப்பும் அமையப் பெறுவதுடன் இதற்கான கொடுப்பனவுகளை கைத்தொழிற் திணைக்களம் மற்றும் நிå ஏரோ அமைப்பினாலும் வழங்கப்படும் எனவும் தெளிவுபடுத்தினார்.

குறித்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர பிரதி ஆணையாளர் உ.சிவராஜா, மாவட்ட கைத்தொழில் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், ஆதித்தியா கைத்தறி நிறுவனத்தின் பணிப்பாளர் சுதாகரன், நியு ஏரோ, எமது சமுகம் ஆகிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் கைத்தறி யிற்சிநெறியினை வழங்கும் ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொணடனர்.

Terms & Conditions
Batticaloa Municipal Council © All rights reserved
Developed by NSystemNetworks