மட்டு மாநகர சபையின் "இளைஞர் பண்ணைகள்" திட்டம் இன்று ஆரம்பம்!

2020-06-06

மட்டக்களப்பு மாநகர சபை அமர்வில் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைவாக தொழிலற்று இருக்கும் இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்பை ஏற்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தினை வளப்படுத்தும் பொருட்டு "இளைஞர் பண்ணை" ஆரம்பிக்கும் முதற்கட்ட செயற்திட்டம் இன்று திராய்மடு பிரதேசத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் அவர்களின் வழிகாட்டலுக்கு அமைவாக திராய்மடு பிரதேச மாநகர காணியினுள் இப் பண்ணை ஆரம்பித்து வைப்பதற்கான சிரமதானப்பணி இன்று செரி நிறுவனம் மற்றும் இளைஞர்கள் சேர்ந்து முன்னெடுக்கப்பட்டது.

இளைஞர்கள் மத்தியில் வீட்டுத்தோட்ட பயிர் செய்கையினை ஊக்குவிக்கும் முகமாக ஆரம்பிக்கப்படும் இளைஞர் பண்ணையில் முதற்கட்டமாக 181 இளைஞர்கள் பங்குபற்றி பயன்பெற உள்ளனர்.

இதன் ஆரம்பகட்ட நிகழ்வில் முதல்வர் தி.சரவணபவன், செரி நிறுவனப் பணிப்பாளர், இளைஞர் சேவை உத்தியோகத்தர் மற்றும் இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டனர்.

இன்று மாநகர முதல்வர் அவர்களின் பிறந்தநாளை கேக் வெட்டி இளைஞர்கள் இணைந்து கொண்டாடினர், முதல்வரின் கரத்தினால் தென்னை மரம் நடப்பட்டதுடன், மரக்கன்றுகளை பரிசாகவும் வழங்கிவைத்தனர்.

Terms & Conditions
Batticaloa Municipal Council © All rights reserved
Developed by NSystemNetworks