தேசிய சுற்றாடல் வார மரம் நடுகை நிகழ்வு

2023-05-31

ஜூன் 05ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மே மாதம் 30ஆம் திகதி முதல் ஜூன் 05ஆம் திகதி வரையான காலத்தை தேசிய சுற்றாடல் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு அதன்கீழ் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி நேற்றைய தினம் (மே30) மரநடுகை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டதுடன், அதனையொட்டி மட்டக்களப்பு மாநகர சபையினால் ஒழுங்கு செய்யப்பட்ட மரநடுகை நிகழ்வானது லொயிட்ஸ் அவனியு பூங்கா வளாகத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் திரு. நா. மதிவண்ணன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநகர சபையின் பிரதி ஆணையாளர் திரு. உ.சிவராஜா, கால்நடை வைத்திய அதிகாரி DR.சி.துஷ்யந்தன், மாநகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் திரு.T. டமராஜ் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

Terms & Conditions
Batticaloa Municipal Council © All rights reserved
Developed by NSystemNetworks