சத்துருகொண்டான் லங்காமாதா வீதியானது கொங்றிட் வீதியாக அபிவிருத்தி செய்யப்படுகின்றது.

2019-01-21

மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் அவர்களினால் முன்னெடுக்கப்படும் துரித வீதி அபிவிருத்திப் பணிகளின் கீழ் சத்துருகொண்டான் லங்காமாதா வீதியானது கொங்றிட் வீதியாக அபிவிருத்தி செய்யப்படுகின்றது.

இதற்கான பணிகளை மாநகர முதல்வருடன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர ஆணையாளர் கா.சித்தரவேல், மாநகர சபை உறுப்பினர்களான க.ரகுநாதன், த.இராஜேந்திரன், துரை மதன், வி.பூபாலராஜா, மற்றும் மாநகர பொறியியலாளர் தேவதீபன், தொழிநுட்ப உத்தியோகத்தர் ச.ராஜகுமார் ஆகியோர் இணைந்து ஆரம்பித்து வைத்தனர்.

பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் 2 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த வீதியானது புனரமைக்கப்பகின்றமை குறிப்பிடத்தக்கது.

Terms & Conditions
Batticaloa Municipal Council © All rights reserved
Developed by NSystemNetworks