அரச அலுவலகங்கள், பொதுமக்கள் ஒன்று கூடும் இடங்களை தொற்று நீக்கும் பணிகளில் மட்டு. மாநகர சபை

2020-05-12

மட்டக்களப்பில் அரச சேவைகள் அனைத்தும் வழமைக்குத் திரும்பியதையடுத்து கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த அரச அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடும் இடங்களில் தொற்று நீக்கி விசிறும் பணிகளை மட்டக்களப்பு மாநகர சபையானது மேற்கொண்டு வருகின்றது.

கொரொனா தொற்றிலிருந்து பொது மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி. சரவணபவனின் பணிப்பின் பேரில் மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் இயங்கும் அரச தனியார் அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடும் இடங்களில் தொற்று நீக்கி விசிறும் பணிகள் இன்றும் (12) முன்னெடுக்கப்பட்டன.

இதற்கமைய சுகாதார நிலையியற் குழுவின் தலைவர் சிவம் பாக்கியநாதனின் மேற்பார்வையில் மாநகர தீயணைப்பு பிரிவினரினால் இன்றைய தினம் அரச ஹோமியோபதி வைத்தியசாலை, மாவட்ட நில அளவை திணைக்களம், ஒக்ஃபார்ம் தொண்டு நிறுவனம் உள்ளிட்ட பொதுமக்கள் ஒன்றுகூடும் பல்வேறு இடங்களில் தொற்று நீக்கி விசிறும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

Terms & Conditions
Batticaloa Municipal Council © All rights reserved
Developed by NSystemNetworks