மணல் வீதியில்லாத மாநகரம்

2020-08-26

மட்டக்களப்பு மாநகர சபையினால் முன்னெடுக்கப்படும் "மணல் வீதியில்லாத மாநகரம்" எனும் கருத்திட்டத்தின் ஊடாக பல மணல் வீதிகளை கிறவல் வீதியாக செப்பனிடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மாநகர சபையின் சொந்த வருமானத்தின் மூலமாகவும், பொது மக்களின் வரிப்பணத்தின் ஊடாகவும் பிரதேச மக்களின் முன்னுரிமைத் தெரிவின் அடிப்படையிலும் மட்டக்களப்பு மாநகர சபையினால் நேரடியாக இப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்படி பாலமீன்மடு மீனவர் வீட்டுத்திட்ட வீதி மற்றும் நாவற்கேணி புதிய எல்லை வீதி 2ஆம் குறுக்கு என்பவற்றினை செப்பனிடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

Terms & Conditions
Batticaloa Municipal Council © All rights reserved
Developed by NSystemNetworks