தூய்மையான நகரமாக மட்டு மாநகரினை மாற்றுமாறு மாநகர ஆணையாளர் சுகாதார பிரிவினருக்கு பணிப்பு

2020-12-09

.

தூய்மையான நகரமாக மட்டக்களப்பு மாநகரினை மாற்றியமைக்கும் நோக்கில் அனைவரும் அர்ப்பணிப்போடு செயற்பட வேண்டும் என மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் மா.தயாபரன் சுகாதார பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்..

மட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளராக கிழக்கு மாகாண ஆளுநரால் கடந்த வியாழக்கிழமை நியமிக்கப்பட்ட மா.தயாபரன் அவர்களுக்கும், சுகாதார மேற்பார்வையாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடலானது நேற்றைய தினம் (08) மாநகர சபையின் குழு மண்டபத்தில் இடம்பெற்றது. இங்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார்..

மட்டக்களப்பு மாநகர சபையினை இலங்கையில் ஓர் முதல்நிலை மாநகர சபையாகவும், தூய்மையான மாநகரமாகவும் மாற்றியமைக்க அனைவரும் அர்ப்பணிப்புடன் சேவையாற்ற வேண்டும் எனவும், இவ்வாண்டு நிறைவடைவதற்கு முன்னர் நகரை முழுமையாக தூய்மைப்படுத்தும் அதேவேளை அனைத்து பூங்காக்களையும் சுத்தப்படுத்தி பொதுமக்களின் பாவனைக்காக கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் பணித்துள்ளார்..

அத்துடன் பொதுமக்களினால் முன்வைக்கப்படும் அனைத்து முறைப்பாடுகள் தொடர்பில் உடனடி கவனம் செலுத்தி அவற்றிக்கான தீர்வுகள் வழங்கப்படுவதற்கும் மற்றும் வரியிருப்பாளர்களுக்கான தேவைகளை சட்ட ஏற்பாடுகளுக்கு ஏற்ப உடனுக்குடன் நிறைவேற்றப்படுவதையும் ஒரு குறிக்கோளாகக் கொண்டு செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். .

Terms & Conditions
Batticaloa Municipal Council © All rights reserved
Developed by NSystemNetworks