மட்டு. மாநகர சபையில் இடம்பெற்ற புத்தாண்டு வரவேற்பு நிகழ்வும் சத்திய பிரமாணமும்

2021-01-02

.

2021 ஆம் ஆண்டின் அரச ஊழியர்களின் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் முதலாம் நாளாகிய இன்று, நாடுபூராகவும் அரச திணைக்களங்கள், மற்றும் அரச நிறுவனங்களில் அரச சேவை உறுதியுரையும், சத்தியப் பிரமாண நிகழ்வுகளும் இடம்பெற்றன..

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு, இலங்கை வாழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் புது வருடமொன்றின் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வானது மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் மா.தயாபரன் அவர்களின் தலைமைiயில் நடைபெற்றது..

ஆணையாளரினால் தேசியக்கொடியும், மாநகர முதல்வர் தி. சரவணபவன் அவர்களால் மாநகர கொடியும் ஏற்றிவைக்கப்பட்டதன் பின்னர், ஒரே நாட்டில், ஒரே தேசத்தில், ஒரே கொடியின் கீழ் ஐக்கியமாகவும் ஒருமித்த மனதுடனும் பாதுகாப்பான எமது தாய் நாட்டினுள் நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கை முன்நிறுத்திய ஒழுக்கமான, சட்டத்தை மதிக்கின்ற, பண்பாடுகளைக்கொண்ட ஆரோக்கியமான சமூகத்தை கட்யெழுப்புவதற்காக சத்தியபிரமானமும் உறுதியுரையும் வழங்கப்பட்டது..

இந்நிகழ்வில் மாநகர பிரதி முதல்வர் க. சத்தியசீலன், மாநகர சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்..

Terms & Conditions
Batticaloa Municipal Council © All rights reserved
Developed by NSystemNetworks