கடற்கரை பகுதியினை சுத்தம் செய்யும் வேலைத் திட்டம்

2023-05-27

கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக மட்டக்களப்பு மாநகர சபையினால் இன்று (27.05.2023) காலை கடற்கரை பகுதியினை சுத்தம் செய்யும் வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் நா.மதிவண்ணன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கௌரவ இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், முன்னாள் மாநகர முதல்வர், முன்னாள் பிரதி முதல்வர், மாநகர பிரதி ஆணையாளர் உ.சிவராஜா, உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் பிரதிநிதிகள், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், மண்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாநகர சபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பெரும் திரளானோர் கலந்துகொண்டு, சுத்தப்படுத்தும் பணிகளையும் முன்னெடுத்திருந்தனர். இதன்படி கல்லடி, திருசெந்தூர், நாவலடி, புதுமுகத்துவாரம், பூநொச்சிமுனை, மஞ்சந்தோடுவாய், பாலமீன்மடு போன்ற கரையோர பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டன.

Terms & Conditions
Batticaloa Municipal Council © All rights reserved
Developed by NSystemNetworks