நாவற்குடா கலைமகள் வீதியினை கொங்றிட் வீதியாக அபிவிருத்தி செய்யும் பணிகளை மாநகர முதல்வர் ஆரம்பித்து வைத்தார்.
பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில், மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட பல வீதிகள் துரித அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கமைய நாவற்குடா கலைமகள் வீதியினை கொங்றிட் வீதியாக மாற்றியமைக்கும் வேலைத் திட்டத்தினை மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.
சுமார் 2 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மேற்படி பணிகள் இடம்பெற்று வரும் இப்பணிகளை மாநகர முதல்வருடன் மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர சபை உறுப்பினர்களான ம.நிஸ்கானந்தராஜா, மா.தி.ஸ்ரீஸ்கந்தராஜா, வி.பூபாலராஜா தொழிநுட்ப உத்தியோகத்தர்களான விஜயராஜா, ச.ராஜகுமார், றிஸ்வான், நித்தியானந்தன் ஆகியோர் இணைந்து ஆரம்பித்து வைத்தனர்.