மட்டக்களப்பு மாநகர சபையின் மனிதநேயச் செயற்பாடுகளில் ஒன்றாக மாநகர நிர்வாக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாற்றுத்திறனாளிகளுக்கான உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது.
தைத்திருநாளை முன்னிட்டு மாவட்ட சமுக சேவைத் திணைக்களத்தினால் சிபார்சு செய்யப்பட்ட 165 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 2500 ரூபாய் வரை பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாகாண சபைகள் மற்றும், உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளர் நஜிமுதீன், உள்ளூராட்சி ஆணையாளர் நா.மணிவண்ணன், மாநரக பிரதி முதல்வர் க.சத்திசீலன், மாநகர ஆணையாளர் கா.சித்திரவேல், பிரதி ஆணையாளர் நா.தனஞ்ஜெயன், சமுக சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர் பா.ராஜ்மோகன் மற்றும் மாநகர சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர்.