மட்டக்களப்பு மாநகர சபையின் டெங்கு தொடர்பிலான மீளாய்வுக் கூட்டம் மட்டக்களப்பு மாநகர கௌரவ முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் தற்போதைய நிலமைகள் தொடர்பிலும், தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
குறிப்பாக கழிவகற்றல் நடவடிக்கைகளின் போது ஏற்படும் பிரச்சினைகள் காரணமாக ஏற்படும் நுளம்பு பெருக்கம் அவற்றினை கட்டுப்படுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டது.
அத்துடன், டெங்கு தொடர்பான நடடிக்கைகளுக்கு பாடசாலை மட்டத்தில் ஒத்துழைப்பு குறைவாக கிடைக்கின்றமை மற்றும் முறையான செயற்பாடுகளை மேற்கொள்ளாமை தொடர்பிலும் இங்கு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
இந்த கலந்தரையாடலில், மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர ஆணையாளர் கே.சித்திரவேல், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பணிப்பாளர் வைத்தியர் கே.கிரிசுதன், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நிறைவேற்று பொறியியலாளர் சசினந்தன், மாநகர பிரதி ஆணையாளர் என்.தனஞ்ஜெயன், பொது சுகாதார பரிசோதகர்கள், கல்விப் பணிமனை அதிகாரிகள், பொலிஸ் மற்றும் ஏனைய பிரிவுகளின் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.