அதிமேதகு ஜனாதிபதியின் தூரநோக்குச் சிந்தனையின் பிரகாரம் "போதைப்பொருள் பாவனைக்கு எதிராக செயற்படுவோம்" எனும் தொனிப்பொருளில் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வானது மட்டக்களப்பு மாநகரசபையில் இடம்பெற்றது.
இன்று 03.04.2019 காலை 8.30 மணியளவில் மாநகர ஆணையாளரின் தலைமையில் மாநகரசபை வளாகத்தில் இடம்பெற்றது.
இதன்போது தேசியகொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் மாநகர உத்தியோகத்தர்களும் தமது கைகளை நீட்டி போதைப் பொருளுக்கு எதிராக செயற்படுவோம் என உறுதிமொழி தெரிவித்தார்கள்.
போதை அரக்கனுக்கு சாட்டையடி கொடுத்து,போதையற்ற நாட்டை கட்டியெழுப்பி நாட்டின் பொருளாதார அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென்பதுதான் நாட்டினுடைய ஜனாதிபதியின் எண்ணமும்,சிந்தனையாகும்.
இதன் பிரகாரம் மாநகர உத்தியோகத்தர்களும் ஒன்றிணைந்து போதைக்கு எதிராகவும், போதைப் பழக்கத்தில் ஈடுபடுவோரை சீர்செய்து புதியதொரு போதையற்ற சமூதாயத்தை உருவாக்க திடசங்கற்பம் பூணுவோம் என சத்தியப்பிரமானமும் செய்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மாநகர முதல்வர் தி.சரவணபவன், மாநகர பிரதி ஆணையாளர் நா.தனஞ்ஜெயன், உள்ளிட்ட மாநகர உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.