கம்பெறலிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மாமாங்கம் 1ஆம் மற்றும் 3ஆம் குறுக்கு வீதிகள் கொங்றிட் வீதியாக அபிவிருத்தி செய்யும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் "கம்பெறலிய" கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மாநகர சபையின் 7ஆம் வட்டார உறுப்பினர் புஷ்பராஜா ரூபராஜின் வேண்டுகோளிற்கு இணங்க தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் அவர்களின் 2 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மாமாங்கம் 1ஆம் மற்றும் 3ஆம் குறுக்கு வீதிகள் கொங்றிட் வீதிகளாக அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பு மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் குறித்த வீதிகளின் அபிவிருத்திப் பணிகளை பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தியாகராஜா சரவணபவன், பிரதி முதல்வர் கந்தசாமி சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர்களான தம்பிராஜா இராஜேந்திரன், புஷ்பராஜா ரூபராஜ், கந்தசாமி ரகுநாதன், மாநகர பொறியியலாளர் திருமதி. சித்திராதேவி லிங்கேஸ்வரன் மற்றும் தொழிநுட்ப உத்தியோகத்தர் ச.ராஜகுமார் ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.