உக்கக்கூடிய கழிவுகளிலிருந்து உயிரியல் வாயு தயாரிக்கும் பொறிமுறை பற்றி மாநகர சுகாதாரத் தொழிலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வுடன் கூடிய செய்முறை இன்று (27) மாநகர பொதுச் சந்தை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள உயிரியல் வாயுக் கட்டமைப்பில் பரீட்சிக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்ததுடன் மட்டக்களப்பு மாநகரசபை இணைந்து ரூபாய் 1.8 மில்லியன் செலவில் நிர்மாணிக்கபட்ட கட்டமைப்பை ப்பிற்கு 75 வீதமான நிதியை மாநகரசபையும் 25 வீதமான நிதியை ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டமும் (UNDP) வழங்கியது.
உயிரியல் வாயு தயாரிக்கும் பொறிமுறை தொழில்நுட்ப உதவி வழங்கும் ஜனதக்சன் நிறுவனத்தின் உதவிப் பணிப்பாளர் டம்மித சமரக்கோன் மற்றும் நிறுவனத்தின் முன்னாள் மாகாணப் பணிப்பாளர் அனுலா அன்ரன் ஆகியோர் கட்டமைப்பிலிருந்து வெளிவரும் மெதேன் (CH4) வாயுவைக் கொண்டு காகிதத்தை எரித்துக் காட்டினர்.
இந்நிகழ்வில் மாநகரசபையின் சுகாதார நிலையியற் குழுவின் உறுப்பினர் சிவம் பாக்கியநாதன், பொறியியலாளர் சித்திராதேவி லிங்கேஸ்வரன் மற்றும் சுகாதார பிரிவின் கிளைத் தலைவர் பத்மஸ்ரீ இராஜகுலேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.