மட்டக்களப்பு மாநகர சபையினதும் UNDP நிகழ்ச்சித்திட்டத்தினதும் (1, 778, 000.00 ரூபாய்) நிதி ஒதுக்கீட்டின் கீழ் “உயிர் வாயு கலன்” அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (17.08.2018) மாநகர பொதுச்சந்தைத் தொகுதிக்குள் இடம்பெற்றது.
கழிவுப்பொருட்களை காற்றில்லாச் சூழ்நிலையில் நொதிக்கச் செய்வதன் ஊடாக அசிட்டிக் அமிலம், புரோபியனிக் அமிலம், மற்றும் பிட்யூட்ரிக் அமிலம் என்ற ரசாயனங்கள் உருவாகின்றன. இந்த மூன்று அமிலங்களும் கடைசியில் மீத்தேன் என்ற வாயுவாக மாறி விடுகின்றன. இந்த மீத்தேன் வாயு நன்றாக எரியும் தன்மை கொண்டது. இந்த வாயு மற்ற எரிவாயுக்களை விட மிகவும் வெப்பத்துடன் எரியும் தன்மை கொண்டது என்பதால் சமையல் உள்பட அனைத்து எரிக்கும் தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதே செயன்முறையின் கீழ் மட்டக்களப்பு மாநகர பொதுச்சந்தைக்குள் சேகரிக்கப்படும் கழிவுகளை ஒரு இடத்தில் சேர்த்து அதிலிருந்து மீத்தேன் வாயுவை பெறுவதற்கான “உயிர் வாயு” கலன் அமைப்பைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு பொதுச்சந்தைக்குள் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மாநகர முதல்வர், மாநகர ஆணையாளர், பிரதி ஆணையாளர், பிரதி முதல்வர் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இத்திட்டத்தின் ஊடாக பெறப்படும் எரிவாயுவை முதற்கட்டமாக கொள்வனவு செய்ய மட்டக்களப்பு பொலிஸ் விடுதி சமுகம் முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.