அவுஸ்ரேலியா உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி மாநகர சபைக்கு விஜயம்

2019-09-22

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான அவுஸ்ரேலியா உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி உள்ளிட்ட குழுவினர் இன்று (20) மட்டக்களப்பு மாநகர சபைக்கு உத்தியோகபூர்வ விஜயம் கொண்டிருந்தனர்.

மட்டக்களப்பு மாநகர முதல்வரின் அலுவலகத்தில் இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடலில் அவுஸ்ரேலியாவின் தெற்கு மற்றும் மேற்கு ஆசியப்பகுதிக்கான உதவி செயலாளர் கலாநிதி லஸியன் ஸரீகம், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான செயலாளர் டோம் டேவிஸ் மற்றும் மாநகரப் பிரதி முதல்வர் க.சத்தியசீலன் உட்பட மாநகரசபையின் உத்தியோகத்தர்கள் ஆசியமன்ற பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

குறிப்பாக மட்டக்களப்பு மாநகருக்குள் திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகள் தொடர்பிலும் ஆசிய மன்றம் உள்ளிட்ட நிறுவனங்களின் ஒத்துளைப்புகளுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள் நலத் திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன். சுற்றுத்துறையின் விருத்திக்கு அவுஸ்திரேலிய அரசினால் மேற்கொள்ளபடவுள்ள பணிகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் சுற்றுலா உட்பட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அவுஸ்ரேலிய அரசாங்கம் தேவையான உதவிகளை வழங்க தயாராகவுள்ளதாகவும் அதேபோல் இலங்கையில் வாழும் தமிழர்கள் தொடர்பில் தாமும், தமது நாடும் தொடர்ந்தும் அக்கறையுடன் செயற்பட்டு வருதாகவும் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அவுஸ்ரேலிய தூதுவர் டேவிட் ஹோலி தெரிவித்தார்.

Terms & Conditions
Batticaloa Municipal Council © All rights reserved
Developed by NSystemNetworks