பொது மக்களுக்கான துரிதமானதும், வினைத்திறனானதுமான சேவைகளை நவீன தொழிநுட்பங்களின் உதவியுடன் வழங்கும் நோக்கில் மட்டக்களப்பு மாநகர சபையின் பிரஜைகள் சேவை மையம் திறந்து வைக்கப்பட்டு மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த சேவை மையமானது அவுஸ்திரேலிய வெளிவிவகார வர்த்தக திணைக்களத்தின் நிதிப் பங்களிப்புடன் ஆசிய மன்றத்தின் உபதேசிய ஆளூகை நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் வதியும் மக்களுக்கான சேவைகளை துரிதமாகவும், தங்கு தடையற்ற முறையிலும் வழங்கக் கூடியதாக இந்த பிரஜைகள் சேவை மையம் இருக்கும் என எதிர்பார்க்கின்றோம்.
மேற்படி மையத்தின் ஊடாக பொதுமக்கள் ஒரே இடத்தில் மாநகர சபையின் அனைத்து விதமான சேவைகளையும் துரிதமாகப் பெற்றுக் கொள்ள முடியும். அத்துடன் மாநகர சபைக்கு வருகைதராது நேரடியாக வீட்டிலிருந்தவாறே இணையத்தளத்தின் ஊடாக பதிவுகளை மேற்கொள்வதோடு, கட்டணங்களையும் செலுத்தக் கூடியதாக இருக்கும்.