நெகிழியின் (பிளாஸ்டிக்) பாவனையால் சுழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கில் உருவாக்கப்ட்ட பிளாஸ்டிக் மீழ் சுழற்சிக்கான சேகரிப்பு நிலையங்களை இன்று (18.12.2019) மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் திறந்து வைத்தார்.
மட்டக்களப்பு மாநகர சபையுடன் ஆசிய மன்றம், கொக்ககோலா மற்றும் எக்கோ ஸ்பாக்லஸ் நிறுவனங்கள் இணைந்து நிறுவியுள்ள நெகிழி (பிளாஸ்டிக்) மீழ் பாவனைக்கான சேகரிப்பு நிலையங்கள் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட திருப்பெருந்துறை மற்றும் கல்லடிப் பகுதிகளில் திறந்து வைக்கப்பட்டன.
நீண்ட காலம் அழியாமல் சூழலின் உயிர்ப்புத் தன்மை அழிப்பதுடன், கடல்வாழ் உயிரினங்களுக்கும் பாதிப்பினை ஏற்படுத்திவரும் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து அவற்றை மீழ்சுழற்சி செய்யும் பொருட்டு மேற்படி சேகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களால் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை குறித்த சேகரிப்பு நிலையங்களில் வழங்கி அங்கு வழங்கப்படும் இலத்திரணியல் புள்ளி அட்டையில் பதிவு செய்து அப் புள்ளிகளுக்கு நிகரான பொருட்களைக் கொள்வனவு செய்து கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் ஆசிய மன்றத்தின் பிரதி வதிவிடப் பிரதிநிதி ஜோகான் றிபேட் கொக்ககோலா நிறுவனத்தின் விரிவாக்கல் பணிப்பாளர் லக்ஸான் மதுரசிங்க, மட்டக்களப்பு மாநகர பிரதி முதல்வர் கந்தசாமி சத்தியசீலன் மாநகர ஆணையாளர் க.சித்திரவேல், பிரதி ஆணையாளர் உ.சிவராஜா, பிராந்திய உள்;ராட்சி உதவி ஆணையாளர் சி.பிரகாஸ், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் எஸ்.கோகுலன் மற்றும் மாநகர சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.