பிறந்துள்ள புதுவருடத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் இன்று (01.01.2020) காலை பொது நிர்வாக மற்றும் உள்நாட்டு அமைச்சின் சுற்று நிருபத்திற்கமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல அரச அலுவலுகங்களிலும் வருடத்தின் முதல் நாளுக்கான அலுவலுகப் பணிகள் 9.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டன. இதேவேளை மட்டக்களப்பு மாநகர சபையின் புது வருடத்திற்கான அலுவலக பணிகளின் ஆரம்ப நிகழ்வு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது.
ஆரம்ப நிகழ்வாக மாநகர ஆணையாளரால் தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதன் பின் 2 நிமிடம் மௌன அஞ்சலி இடம்பெற்றது. பின்பு அலுவலுகப் பணிகளுக்கான உறுதிமொழி இங்கு மாநகர சபையின் பிரதி ஆணையாளர் உ.சிவராஜாவினால் வாசிக்கப்பட்டு ஊழியர்களால் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதன் பின் வழமை போல் அலுவலுகப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
இவ் நிகழ்விற்கு மட்டு மாநகர சபை ஆணையாளர் கே.சித்திரவேல் மற்றும் பிரதி முதல்வர் எஸ்.சத்தியசீலன் மாநகர சபையின் உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தார்கள் ஊழியர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.