கழிவு மேலான்மை முகாமைத்துவத்தின் ஊடாக முதலீடுகளை மேற்கொள்ளுதல் மற்றும் தொழில் வாய்ப்புகளை உருவாக்குதல் தொடர்பிலான கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இன்று (12.01.2020) இடம்பெற்றது.
மேற்படிக் கலந்துரையாடலில் தற்கால நகர மயமாக்கலின் காரணமாக சுற்றுசூழலில் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பிலும் அவற்றை நிவர்த்தி செய்வதற்கான வழிவகைகள் தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டன.
குறிப்பாக மீள்பயன்பாடு மற்றும் மீள்சுழற்சி என்ற கழிவு மேலாண்மை வியூகத்தில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் யு.எஸ்.எயிட் நிறுவனங்களின் நிதி அனுசரணையிலும், தனியார் துறைசார் முதலீடுகளின் ஊடாகவும் நடைமுறைப்படுத்த உத்தேசித்துள்ள செயற்றிட்டங்கள் தொடர்பிலும் அதன் ஊடாக இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தல் தொடர்பிலும் விரிவாக இங்கு ஆராயப்பட்டது.
மேற்படிக் கலந்துரையாடலில் பயோ-பவர் நிறுவனத்தின் பணிப்பாளர் கத்தறின் செச்சிலிங், மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், ஆணையாளர் கா.சித்திரவேல், பிரதி ஆணையாளர் உ.சிவராஜா, உள்ளூராட்சி உதவி ஆணையாளர் சி.பிரகாஸ், கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், விவசாயத் திணைக்களம், தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் சமுக செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.