ஊரடங்கு சட்டம் இலகுபடுத்தப்படுவதால், கொரொனா நோய்த் தொற்றினை கட்டுப்படுத்தும் வகையில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டமானது நாளை திங்கட்கிழமை (20) காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் இரவு 8.00 மணிக்கு அமுல் படுத்தப்படவுள்ளது. இந்நிலையில் அன்றைய தினம் மதுபான சாலைகள், அழகுக் கலை நிலையங்கள், உணவகங்கள் மற்றும் சிற்றூண்டிச் சாலைகள் என்பன தவிர்ந்த ஏனைய வர்த்தக நிறுவனங்களை திறப்பதற்கான அனுமதி மாவட்ட கொரோணா ஒழிப்பு செயலணி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனையொட்டி மட்டக்களப்பு மாநகருக்குள் பொது மக்கள் ஒன்றுகூடும் இடங்களை சுத்தப்படுத்தி, கிருமியகற்றும் பணிகளை மாநகர தீயணைப்பு பிரிவினரும், சுகாதாரப் பிரிவினரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர். குறித்த பணிகளை மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், சுகாதார நிலையியற் குழுவின் தலைவர் சிவம் பாக்கியநாதன், மாநகர சபை உறுப்பினர்களான தம்பிராஜா ராஜேந்திரன், மதன் துரைசிங்கம், இரா அசோக் ஆகியோரும் வளிநடத்தியிருந்தனர்.