மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட (11.03.2020) மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவனால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அரசாங்கத்தின் நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சம்மிக்க நோக்கு எனும் கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாக, கிராமிய அபிவிருத்தியினூடாக நாட்டை அபிவிருத்தி செய்தல் எனும் தொணிப்பொருளில் நிதி மற்றும் பொருளாதார, கொள்கைத் திட்டமிடல் அமைச்சினால் நாடு பூராகவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சப்றிகம அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரனின் முன்மொழிவின் படி புதுநகர் எல்லை வீதி 4ஆம் குறுக்கு வீதியானது 2 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கொங்றிட் வீதியாக அபிவிருத்தி செய்யும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
இதன்படி மட்டக்களப்பு மாநகர சபையினால் நேரடியாக மேற்கொள்ளப்பட்டு வரும் மேற்படி வீதிப் பணிகளை மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர் இரா அசோக், தொழிநுட்ப அலுவலர் எம்.ஏ.ஏம் றிஸ்வான், புதுநகர் பகுதிக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ரஜனி ஆகியோரும் இணைந்து ஆரம்பித்து வைத்தனர்.