சித்திர வருடப்பிறப்பிற்கு முன்னர் மக்களிடம் கையளிக்கும் வகையில் கல்லடிப் பொதுச் சந்தையின் விஸ்தரிப்புப் பணிகளை துரிதப்படுத்துமாறு முதல்வர் சரவணபவன் பொறியிலாளரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
மட்டக்களப்பு மாநகர முதல்வரின் 1000 நாள் அபிவிருத்தித் திட்டதின் கீழ் மட்டக்களப்பு நகரை அண்டியுள்ள பகுதிகளில் உள்ள 4 பொதுச் சந்தைகள் சித்திரை வருடப்பிறப்பிற்கு முன்னர் நவீன முறையில் விஸ்தரிக்கப்பட்டு பொது மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன.
இதன்படி நகரை அண்டிய கல்லடிப் பிரதேசமானது வர்த்தக ரீதியாக வளர்ச்சியடைந்து வரும் ஓர் பிரதேசமாக மாறி வருவதனை கவனத்தில் கொண்டு பொதுமக்களின் அசௌகரியங்களைக் குறைக்கும் வகையிலும், அப்பிரதேசத்தில் உள்ள உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கான சந்தைப்படுத்தல் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கிலுமாக கல்லடிப் பொதுச்சந்தையின் விஸ்தரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இப்பணிகளை இன்று (05.03.2020) நேரில் சென்று பார்வையிட்ட மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் குறித்த அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்துமாறு மாநகர பொறியியலாளரிடம் வேண்டுகோள் விடுத்தார்.