மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட கல்லடி பொதுச் சந்தையின் நவீனமயப்படுத்தப்பட்ட இறைச்சிக் கடைத் தொகுதியானது மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
கிழக்கு மாகாண சபையின் குறுங்கால வேலைத்திட்டத்தின் ஊடாக குறித்தொதுக்கப்பட்ட 1.1 மில்லியன் ரூபாய் நிதியில் விஸ்தரிக்கப்பட்ட இறைச்சிக் கடைத் தொகுதியினை மக்களின் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வானது மாநகர ஆணையாளர் கா.சித்திரவேல் தலைமையில் இடம்பெற்றது.
சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டலின் கீழ் கழிவகற்றல் வசதிகளுடன் நவீனமுறையில் வடிவமைக்கப்பட்ட இவ் ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சிக் கடைகளை உள்ளடக்கிய கட்டிடத்தினை மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், பிரதி ஆணையாளர் உ.சிவராஜா, மாநகர சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், பொதுச் சந்தையின் பாவனையாளர்கள் உள்ளிட்டபலரும் கலந்து கொண்டனர்.