.
தற்சார்பு பொருளாதாரத்தினை அதிகரிக்கும் பொருட்டு சமூக தோட்டம் (community garden) அமைக்கும் செயற்திட்டம் மட்டக்களப்பு மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. .
தற்கால பொருளாதார நெருக்கடி காலத்தில் பொதுமக்களை வீட்டுத் தோட்டம் செய்வதற்கு ஊக்கப்படுத்துவதன் மூலமாக உணவுப் பாவனையில் ஆரோக்கியத்தினையும், தற்சார்பு பொருளாதாரத்தினை கட்டமைக்கும் முகமாகவும் முன்னோடியாக குறித்த செயற்திட்டமானது எமது மட்டக்களப்பு மாநகர சபையினால் மேற்கொள்ளப்படுகிறது..
குறித்த சமூக தோட்டத்தில் புளியந்தீவு இளைஞர் யுவதிகள் தன்னார்வலர்களாக பங்கெடுக்கின்றனர். இதன் மூலமாக தற்கால இளைஞர்கள் மத்தியில் விவசாயம் பற்றிய அறிவினை மேம்படுத்தவும், ஆர்வத்தினை தூண்டவும் முடியும் என எதிர் பார்க்கப்படுகிறது..