எழுச்சி_மிகு #மாநகரம் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட பணிச்சையடி முதலாம் குறுக்கு வீதியினை தார் வீதியாக அபிவிருத்தி செய்யும் பணிகள் இன்று (15) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாநகர சபையின் 2022ம் ஆண்டுக்கான பாதீட்டு நிதியின் ஊடாக மட்டக்களப்பு மாநகர சபையின் 02ம் வட்டார கௌரவ உறுப்பினர் செல்வி. தாயளகுமார் கௌரி அவர்களின் பாதீட்டு முன்மொழிவுக்கு அமைய 2 மில்லியன் ரூபா செலவில் குறித்த வீதியானது அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது.
பல ஆண்டு காலமாக குன்றும் குழியுமாக கவனிப்பார் அற்று காணப்பட்ட இவ்வீதியானது சுமார் 220 மீற்றர் நீளத்தில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
மேற்படி வீதியின் அபிவிருத்தி பணிகளை மட்டக்களப்பு மாநகர சபையின் கௌரவ பதில் முதல்வர் திரு. கந்தசாமி சத்தியசீலன், மாநகர சபையின் கௌரவ உறுப்பினர்களான செல்வி. தாயளகுமார் கௌரி, திரு. அந்தோணி கிருரஜன், மாநகர சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் திரு.டி.ஜே.கிறிஷ்டிராஜ் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர்.