.
எழுச்சி மிகு மாநகரம் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட 4ஆம் வட்டாரம் சின்ன ஊறணி கொக்குவில் எல்லை வீதியினை தார் வீதியாக அபிவிருத்தி செய்யும் பணிகள் இன்று (10) ஆரம்பித்து வைக்கப்பட்டன..
சின்ன ஊறணி மற்றும் கொக்குவில் கிராம மக்கள், பாடசாலை மாணவர்கள் அதிகளவில் பயன்படுத்தப்படும் இவ் வீதியானது மழை காலங்களில் போக்குவரத்து செய்ய முடியாத நிலையில் காணப்பட்டதுடன் இவ் வீதியினை புனரமைப்பு செய்து தருமாறு மாநகர சபையின் 4 ஆம் வட்டார உறுப்பினரும் ,மாநகர சபையின் கௌரவ பிரதி முதல்வருமான திரு. கந்தசாமி சாத்தியசீலன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பாதீட்டு முன்மொழிவுக்கு அமைய மேற்படி வீதியானது அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. .
இதன்படி மாநகர சபையின் 2022 ம் ஆண்டு ஒதுக்கப்பட்ட பாதீட்டு நிதியில் இருந்து சுமார் 2.5 மில்லியன் ரூபாய் செலவில் மேற்படி வீதியினை செப்பனிடும் பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது..
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபையின் கௌரவ முதல்வர் திரு. தியாகராஜா சரவணபவன், கௌரவ பிரதி முதல்வர் திரு. க.சத்தியசீலன், வேலைகள் குழு தலைவர் திரு. இரா. அசோக், மாநகர சபையின் கௌரவ உறுப்பினர்கள், மாநகர சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர்..