உலக வங்கியின் நிதி அனுசரணையில், உள்ளூர் அபிவிருத்தி ஒத்துழைப்பு வேலைத் திட்டத்தின் LDSP கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத் திட்டங்கள் தொடர்பாகவும், நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், பொருளாதாரத்தினை மீளமைத்துக் கொள்வதற்கான பங்களிப்பினை செய்யும் வகையில் எதிர்கால செயற்திட்டங்களை வடிவமைத்துக் கொள்வதற்கான செயலமர்வானது மட்டக்களப்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் இன்று (10) திங்கட்கிழமை பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது உள்ளூர் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்துதல், உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துதல், உள்ளூராட்சி மன்றங்களின் சேவைகளை மேம்படுத்துதல் போன்ற தலைப்புகளில் பொதுவான விரிவுரைகள் மற்றும் தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டதுடன் குழுக் கலந்துரையாடல்களும் ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டன.