சத்துருக்கொண்டான் சர்வோதய மூன்றாம் குறுக்கு வீதி மற்றும் திராய்மடு 13ஆம் குறுக்கு வீதி என்பனவற்றை தார் வீதியாக அபிவிருத்தி செய்யும் பணிகள்

2022-10-08

எழுச்சி மிகு மாநகரம் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட சத்துருக்கொண்டான் சர்வோதய மூன்றாம் குறுக்கு வீதி மற்றும் திராய்மடு 13ஆம் குறுக்கு வீதி என்பனவற்றை தார் வீதியாக அபிவிருத்தி செய்யும் பணிகள் இன்று (08) ஆரம்பித்து வைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாநகர சபையின் 2022ம் ஆண்டுக்கான பாதீட்டு நிதியின் ஊடாக மட்டக்களப்பு மாநகர சபையின் 03ம் வட்டார கௌரவ உறுப்பினர் திரு.க.ரகுநாதன் அவர்களின் பாதீட்டு முன்மொழிவுக்கு அமைய 126 மீற்றர் நீளத்தில் சத்துருக்கொண்டான், சர்வோதய மூன்றாம் குறுக்கு வீதியும், மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் திரு. ஐ.ஸ்ரீதரன் அவர்களின் பாதீட்டு முன்மொழிவுக்கு அமைய 136 மீற்றர் நீளத்தில் திராய்மடு, 13ஆம் குறுக்கு வீதியும் புனரமைக்கப்படவுள்ளன.

மேற்படி வீதியின் அபிவிருத்தி பணிகளை மட்டக்களப்பு மாநகர சபையின் கௌரவ முதல்வர் திரு. தியாகராஜா சரவணபவன், மாநகர சபையின் வேலைகள் குழு தலைவர் திரு. இரா. அசோக், மாநகர சபை கௌரவ உறுப்பினர் திரு. துரைசிங்கம் மதன், மாநகர சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களான திரு.டி.ஜே.கிறிஷ்டிராஜ், திரு.ஆர். சுதர்சன் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர்.

Terms & Conditions
Batticaloa Municipal Council © All rights reserved
Developed by NSystemNetworks