மட்டக்களப்பு, வெபர் மைதானத்தின் உள்ளக விளையாட்டு அரங்கானது இன்று விளையாட்டு வீரர்களினதும், மாணவர்களினதும் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. விளையாட்டு அமைச்சின் 93 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இம் மைதானமானது நேற்று (09.06.2018) மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
திறந்து வைக்கப்பட்ட இந்த விளையாட்டு அரங்கினுள் வைபக ரீதியாக உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் அனுசரணையுடன், மட்டக்களப்பு கல்வி வலயத்துடன் மட்டக்களப்பு பூப்பந்தாட்ட சங்கமும் இணைந்து நடாத்தும், பூப்பந்தாட்ட பயிற்சி முகாமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த திறப்பு விழா நிகழ்வில் மாநகர சபையின் முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர்கள், மாநகரப் பிரதி ஆணையாளர் நா.தனஞ்ஜெயன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சசினந்தன், மட்டக்களப்பு வலயக் கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன், வலயக்கல்வி பணிமனையின் உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் கே.இரவீந்திரன், மாநகரசபை உத்தியோகத்தர்கள், மற்றும் பாடசாலை மாணவர்கள் எனப்பலர் கலந்து கொண்டிருந்தனர்.