பெரிய உப்போடைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட டெங்கு ஒழிப்பு சிரமதானம்

2018-05-28

மட்டக்களப்பில் தொடரும் சீரற்ற காலநிலையின் காரணமாக நகரில் டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கோடு 25.05.2018 அன்று பெரிய உப்போடை பிரதேசத்தில் கௌரவ மாநகர முதல்வர் தி.சரவணபவன் அவர்களின் தலைமையில் டெங்கு ஒழிப்பு சிரமதானம் இடம்பெற்றது.

மட்டக்களப்பு சுகாதாரப் பூச்சியியல் நிபுணர்களின் அறிக்கையின்படி கோட்டைமுனை பொதுச் சுகாதாரப் பிரிவிற்குட்பட்ட பெரிய உப்போடை பிரதேசத்தில் டெங்கு தொற்று அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என இனங்காணப்பட்ட நிலையில் குறித்த பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநகர சபைக்கு மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியக் கலாநிதி கே. கிரிசுதன் விடுத்த வேண்டுகோளிற்கு அமைய சிரமதானப் பணி நடைபெற்றதாக மாநகர ஆணையாளர் நா. மணிவண்ணன் தெரிவித்தார்.

பெரிய உப்போடை பிரதேசத்தில் டெங்கு பரவும் மூலங்கள் அடையாளங் காணப்பட்டதோடு குறித்த பிரதேசத்தில் உள்ள வீடுகள், வெற்றுக் காணிகள் பரீட்சிக்கப்பட்டு டெங்கு நுளம்புக் குடம்பிகள் உள்ள காணி உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார நிலையியற் குழுவின் தலைவர் சிவம் பாக்கியநாதன், பிரதி ஆணையாளர் என்.தனஞ்செயன், நிர்வாக உத்தியோகத்தர் திருமதி.ரோ.விக்னேஸ்வரன், மாநகர உறுப்பினர்கள், மாநகரசபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் மாநகர சுகாதாரத் தொழிலாளர்கள் ஆகியோர் சிரமதானப் பணியில் ஈடுபட்டனர்.

Terms & Conditions
Batticaloa Municipal Council © All rights reserved
Developed by NSystemNetworks