மட்டக்களப்பு நாவற்குடா, சுத்தானந்தா பாலர் பாடசாலையின், வருடாந்த கலை நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் 03.05.2018 அன்று மாலை சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலையின் பிரதான மண்டபத்தில் அதிபர் திருமதி. சுந்தரமதி வேதநாயம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகர கௌரவ முதல்வர் தியாகராஜா சரவணபவன் அவர்களும், கௌரவ பிரதி முதல்வர் க.சத்தியசீலன் அவர்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் அவை அங்கு வந்திருந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்வனவாக இருந்தன.
குறிப்பாக இயற்கையின் சமநிலையைப் பேணுவோம் என்னும் தொனிப்பொருளில் நடாத்தப்பட்ட சின்னஞ்சிறு பாலகர்களின் நாடகம் அனைவரது பாராட்டினையும் பெற்றது.
அத்துடன் எதிர்வரும் தை மாதம் ஆண்டு ஒன்றுக்கு செல்லும் மாணவர்களுக்கான பட்டமளிப்பு நிகழ்வு நடைபெற்றதுடன், தற்போதுள்ள மாணவர்களுக்கான பரிசளிப்பும் நடைபெற்றது.
மாநகர சபையின் கௌரவ உறுப்பினர்களான நிஷ்கானந்தராஜா, சிறிஸ்கந்தராஜா, செல்வி மனோகர், ஆகியோருடன் ஜெய்க்கா சூழலியல் திட்ட உதவியாளர் சடோமி வடா, சைவப்புலவர் திருமதி சிவனந்தஜோதி ஞானசூரியம், பாடசாலையின் பழைய மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.