மட்டக்களப்ப மாநகர சபையின் உப விதி உருவாக்கம் பற்றி கலந்துரையாடல் மாநகர ஆணையாளர் கா.சித்திரவேல் தலைமையில் 29.11.2018 அன்று மட்டக்களப்பு மாநகரசபை குழு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதுவரை காலமும் 1947 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க மாநகரக் கட்டளைச் சட்டத்திற்கு ஏற்ப நடைமுறைப்படுத்தப்பட்டுவந்த சுகாதார நலன்பேணல் விடயங்களை தற்காலத்திற்கு ஏற்ப மாற்றியமைப்பதற்கும், நவீனமயமாக்கலின் ஊடாக மக்கள் எதிர்கொள்ளும் சுகாதாரப் பிரச்சனைகளிலிருந்து அவர்களை மீட்டு தூய்மையான மாநகரை உருவாக்குவதற்கும். இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேற்படி கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் க. சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர்களான சிவம் பாக்கியநாதன், இரா. அசோக், மாநகர பிரதி ஆணையாளர் நா.தனஞ்ஜெயன் மற்றும் மாநகர உத்தியோகத்தர்களுடன், வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், சுகாதார வைத்திய அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சுற்றுச்சூழல் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், ஜெய்க்கா நிறுவனத்தின் தொண்டர் பணியாளர்கள், சமுக நலன் விரும்பிகள், வர்த்தக சம்மேளனத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டு தமது கருத்துகளையும், உப விதி அமைவுக்கான ஆலோசனைகளையும் முன் வைத்தனர்.