கல்லடி பொதுச் சந்தை மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

2019-02-14

விஸ்தரிக்கப்பட்ட நவீன கடைத் தொகுதியுடன் கூடிய கல்லடி பொதுச் சந்தையானது கௌரவ மாநகர முதல்வர் தி.சரவணபவன் அவர்களால் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

மட்டக்களப்பு நகரை அண்டிய கல்லடிப் பிரதேசமானது வர்த்தக ரீதியாக வளர்ச்சியடைந்து வரும் ஓர் பிரதேசமாக மாற்றமடைந்து வருவதனை கவனத்தில் கொண்டு அங்குள்ள உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கான சந்தைப்படுத்தல் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் கல்லடிப் மாநகர சந்தை வளாகத்தில் அமைக்கப்பட்ட கடைத்தொகுதியுடன் கூடிய இக்கட்டிடத் தொகுதியானது பொது மக்களினதும், வர்த்தகர்களினதும் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாநகர சபைக்கு என மக்களினால் செலுத்தப்பட்டு வரும் வரிப் பணமானது மீண்டும் அவர்களுக்கே சென்றடைய வேண்டும் என்ற நோக்கோடு மாநகர சபையின் நிதி மூலமாக நிர்மாணிக்கப்பட்ட இச் சந்தைத் தொகுதியினை எமது மக்களிடம் கையளிக்கப்பதில் தான் பெருமிதம் அடைவதாக கௌரவ மாநகர முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் மாநகர ஆணையாளர் காசி சித்திரவேல், கௌரவ பிரதி முதல்வர் கந்தசாமி சத்தியசீலன், பிரதி ஆணையாளர் நாகராஜா தனஞ்ஜெயன், மற்றும் மாநகர சபையின் கௌரவ உறுப்பினர்கள், மாநகர சபை உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Terms & Conditions
Batticaloa Municipal Council © All rights reserved
Developed by NSystemNetworks