அன்மையில் ஏற்பட்ட அசாதாரண காலநிலையை அடுத்து வட மாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணப் பொருட்களை சேகரிக்கும் நடவடிக்கைகளில் மட்டக்களப்பு மாநகர சபையானது ஈடுபட்டு வருகின்றது.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக தமது உணவு, உடை, உறையுள் என்பவற்றை இழந்து நிர்க்கதியான நிலையில் அகதி முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ள தமிழ் உறவுகளுக்கு மனித நேய அடிப்படையில் உதவும் முகமாக மேற்படி நிவாரணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேற்படி நிவாரணப்பணிகளில் இணைந்து கொண்டு, தங்களது நிவாரணப் பொருட்களை வழங்க விரும்பும் மக்கள் அவற்றை இன்று 24.12.2018 தொடக்கம் எதிர்வரும் 27.12.2018ந் திகதி வரை தங்களை நாடிவருகின்ற மாநகர சபையின் நிவாரண சேகரிப்பு வாகனம் மூலமாகவோ அல்லது இதற்கென காந்திப் பூங்காவில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள சேகரிப்பு நிலையத்தின் ஊடாகவோ அவற்றை ஒப்படைக்கலாம். என மாநகர சபை வினயமாகக் கேட்டுக் கொண்டுள்ளது.
அத்துடன் இந்நிவாரணப் பணிகளில் சேகரிக்கப்படும் பொருட்கள் யாவும் எதிர்வரும் 28.12 2018 அன்று மாநகர சபையின் வாகனங்கள் மூலமாக நேரடியாக கொண்டு சென்று வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளமையும் குறிப்படத்தக்கது.