மட்டக்களப்பு மாநகரசபைக்கு அவுஸ்ரேலியாவில் உள்ள நலன்விரும்பிகளினால் சிறுவர்களுக்கான புத்தகங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
மேற்படி புத்தகங்கள் மட்டக்களப்பு சேவா லங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் திரு.ஜெ.சாய்ராஜன் அவர்களினால் கௌரவ மாநகர முதல்வர் தி.சரவணபவன் அவர்களிடம் கையளிக்கப்பட்டன.
இதேபோன்று சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலிருந்தும் இதற்கு முன்னதாக மாநகரசபைக்கு புத்தகங்கள் கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.