மட்டக்களப்பு மாநகரசபையினால் பிளாஸ்டிக் போத்தல்கள் மீள்சுழற்சிக்கு உட்படுத்துவதற்கான கலந்துரையாடல் கௌரவ மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் அவர்களின் தலைமையில் ஆசிய மன்றம் மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது.
அதிகரித்துவரும் பிளாஸ்ரிக் கழிவுகளை கட்டுப்படுத்தவும் பொது மக்கள் இதனை சேகரித்து மாநகரசபைக்கு மொத்தமாக வழங்குவதன் மூலம் வருமானமீட்டுவும் முடியுமென மாநகர முதல்வர் தெரிவித்தார்.